close
Choose your channels

பிரபல நடிகரின் அலுவலகத்தில் திருட்டு.. திருடு போன திரைப்படங்களின் நெகட்டிவ்கள்..!

Friday, June 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகரின் அலுவலகத்தில் மர்ம நபர்கள் நுழைந்து திரைப்பட நெகட்டிவ் உள்பட விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் அனுபம் கெர் அவர்கள் கடந்த 1982 முதல் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருகிறார் என்பதும் ஹிந்தியில் ஏராளமான படங்கள் நடித்த இவர் தமிழில் ’லிட்டில் ஜான்’ ’குற்றப்பத்திரிகை’ ’விஐபி’ ’கனெக்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அனுபம்கெர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அலுவலகத்தில் திருடர்கள் நுழைந்து திரைப்படங்களின் நெகட்டிவ்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடி சென்றதாக பதிவு செய்துள்ளார். தன்னுடைய வீர தேசாய் சாலையில் உள்ள அலுவலகத்தில் தான் பூட்டை உடைத்து திருடர்கள் கைவரிசை காட்டி இருப்பதாகவும், இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சிசிடிவி காணொளியை வைத்து திருடர்களை பிடித்து விடலாம் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வருவதாகவும் கூறிய அனுபம்கெர், கடவுள் அந்த குற்றவாளிகளுக்கு ஞானத்தை கொடுத்திட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்’ என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment