வீட்டில் திருடிய 19 வயது இளைஞனை துரத்திய தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,January 19 2022]

தனது வீட்டில் திருடிய 19 வயது இளைஞனை தமிழ் நடிகை ஒருவர் துரத்தியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

ஜிவி பிரகாஷ் நடித்த ’டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் குடியிருந்து வரும் நிலையில் இவரது வீட்டில் 19 வயது தனுஷ் என்பவர் கடந்த 5 மாதங்களாக வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனுஷ், நிக்கி கல்ராணியின் வீட்டில் உள்ள பொருட்களை ஒரு மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு தப்பிக்க முயன்றபோது, தனுஷை நிக்கி கல்ராணி துரத்திப் பிடிக்க முயன்றும் அவர் தப்பிவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து நிக்கி கல்ராணி சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனுஷை தேடிவந்தனர். தனுஷ் திருப்பூரில் இருப்பதாக அறிந்து அவரை திருப்பூர் சென்று கைது செய்தனர். அவரிடம் இருந்து நிக்கி கல்ராணி வீட்டில் திருடிய ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More News

இன்ஸ்டாவில் நுழைந்த போனி கபூர்… ஸ்ரீதேவி புகைப்படம் வெளியிட்டு நெகிழ்ச்சி!

பிரபல சினிமா தயாரிப்பாளரான போனி கபூர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாவில் கணவர் பெயரை நீக்கிய சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா… விவாகரத்து காரணமா?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா

தயவுசெய்து அவர்களை விட்டுவிடுங்கள்: தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்!

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இது குறித்து பல திரையுலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து

பூஜா ஹெக்டேவின் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்: ரசிகர்களின் சுவாரஸ்ய கமெண்ட்ஸ்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டேவின் வேற லெவல் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ள நிலையில்

கவின் அடுத்த படத்தை தயாரிப்பது இந்த நிறுவனமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின் நடித்த 'லிப்ட்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே