close
Choose your channels

பிரபல ஸ்டண்ட் இயக்குனர் வீட்டில் அரை கிலோ வெள்ளி திருட்டு!

Friday, August 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஸ்டண்ட் இயக்குனர் வீட்டில் அரை கிலோ வெள்ளி உள்பட விலைமதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டதாக புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்ஜிஆர், சிவாஜி, என்டிஆர், ராஜ்குமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் அஜீத் உள்பட பல பிரபலங்களின் படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்தவர் ஜூடோ ரத்தினம். இவர் தற்போது வயது மூப்பு காரணமாக தனது சொந்த ஊரான குடியாத்தம் பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 16ம் தேதி திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்த நிலையில் அவருடைய குடியாத்தம் வீட்டில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து திரும்பி வந்த ஜூடோ ரத்தினம் தனது வீட்டில் இருந்த அரை கிலோ வெள்ளி, 15 விலை உயர்ந்த பட்டு சேலைகள், இரண்டு ரோலக்ஸ் வாட்சுகள், 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போய் இருப்பதாக புகார் அளித்தார். இந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment