பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள்… 19 பேர் உயிரிழப்பு மற்றும் பரபரப்பு நிகழ்வுகள்!!!
- IndiaGlitz, [Tuesday,November 03 2020]
ஆப்கானிஸ்தானில் குவிந்து இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு படையை விலக்கி கொள்ளுமாறு கடந்த சில ஆண்டுகளாகவே கிளர்ச்சியாளர்கள் அங்கு கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த பேச்சுவார்த்தையும் நாடாபா கட்டார் எனும் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கிளர்ச்சியாளர்கள் தற்போது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் உள்ள பல்கலைக் கழகத்தில் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர். இச்சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று மதியம் தீவிரவாதக் கும்பல் காபூல் பல்கலைக் கழகத்தை குறி வைத்து தாக்கத் தொடங்கியதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டு இருக்கிறது. பின்பு அங்கிருந்த 3 பேர் பல்கலைக் கழகத்தின் வளாகத்திற்குள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்ததாகவும் அதனால் புத்தகக் கண்காட்சியில் இருந்த மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இத்தாக்குதலில் 19 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர். மேலும் 12 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புத்தகக் கண்காட்சிக்குள் சிக்கிக் கொண்ட மாணவர்களை பாதுகாப்புப் படையினர் மீட்டனர். ஆனாலும் அங்கு நடைபெற்ற சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் உ யிரிழந்து உள்ளனர். இப்படி அமெரிக்க படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது அங்கு தினமும் நடைபெறும் நிகழ்ச்சியாக ஊடகங்கள் குறிப்பிடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருப்பதோடு பல உயிரிழப்புகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் உள்ளூரில் இயங்கி வரும் ஐஎஸ் எனும் தீவிரவாத அமைப்பிற்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிப்பப் படுகிறது. ஆனால் பல்கலைக் கழகத்தின் மீது தொடுத்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்புகளும் பொறுப்பு ஏற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு கடந்த சில ஆண்டுகளாகவே இங்குள்ள கிளர்ச்சியாளர்கள் ஷியா பிரிவு முஸ்லீம்களை கடுமையாக ஒடுக்குவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.