வில்லன் நடிகருக்கு கோவில் கட்டிய கிராமத்து மக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் குஷ்பு உள்பட ஒரு சில நடிகைகளுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராமத்து மக்கள் வில்லன் நடிகர் ஒருவருக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அப்போது அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததில் பெரும் பங்கு வகித்தவர் நடிகர் சோனு சூட்.
ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ சிம்பு நடித்த ’ஒஸ்தி’ அனுஷ்கா நடித்த ’அருந்ததி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஒரு சில ஹிந்தி படங்களிலும் சோனுசூட் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. திரையில் வில்லன் வேடத்தில் நடித்தாலும் நிஜத்தில் இவர் பொதுமக்களால் ஹீரோவாக பார்க்கப்படுகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பியது மட்டுமன்றி அவர்களுக்கு வைப்புநிதி, இன்சூரன்ஸ், வேலை வாய்ப்பு உள்பட பல வசதிகளையும் செய்து கொடுத்தார்.
மேலும் வெளி நாடுகளில் தவித்த மாணவ மாணவிகளை சொந்த ஊருக்கு அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்தார். விவசாயி ஒருவர் உழுவதற்கு தன்னுடைய 2 மகள்களை பயன்படுத்தியதை கேள்விப்பட்டவுடன் புத்தம்புது டிராக்டரை அவர் வீட்டின்முன் மறுநாளே நிறுத்தினார். அதேபோல் டெல்லியில் பணிபுரிந்த பெண் ஐடி ஊழியர் ஒருவர் வேலை போய்விட்டதால் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில் அவருக்கு ஐடி வேலையையும் ஏற்பாடு செய்தார் இதுபோல அவர் செய்த உதவிகள் எண்ணில் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த துப்பா தாண்டா என்ற கிராமத்து மக்களை சோனு சூட் அவர்களுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியபோது ’திரையில் சோனுசூட் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் அவர் எங்கள் கண்களுக்கு ஹீரோவாக திகழ்கிறார். ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளிக்கு உதவி செய்த அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த கோயிலை நாங்கள் கட்டியுள்ளோம். கடவுளுக்கு நிகரான அவருக்கு கோவில் கட்டியதை நாங்கள் அதிர்ஷ்டமாக கருதுகிறோம் என்றும் அவர்கள் நெகழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments