பைஜாமாவில் இரத்தம், சிதறிய விரல்களை நெஞ்சில் வைத்து கண்ணீர் விட்ட MGR
Send us your feedback to audioarticles@vaarta.com
விஸ்வநாதன் , ராமமூர்த்தி என்ற இரட்டை ஜாம்பவான்களுக்கு அடுத்து தமிழ் திரைத்துறையில் முத்திரை பதித்தவர்கள் சங்கர் கணேஷ் ஆவர். அவர்களின் ஆளுமை நிறைந்த இசைத்துறையில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
இவர் மகராசி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். நான் ஏன் பிறந்தேன், இதய வீணை போன்ற எண்ணற்ற வெற்றிப்படங்களை வழங்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய திரைப்படத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் வளம் வருபவர்.
IndiaGlitz நேயர்களுக்கு பிரத்யேகமாக அவர் சுவாரஷ்யமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
"பெரிய இடத்துப் பெண்" படத்தில் வருகின்ற பாரப்பா பழனியப்பா பாடலில் வருகின்ற வித்தியாசமான சத்தம் , மாடு ஓட்டும்போது வரும் சப்தங்களுக்கு குரல் கொடுத்துருக்கிறேன்.
வடபழனியில் இருந்து கோடம்பாக்கம் வரும்போது அந்த பகுதி முழுவதும் அடர்ந்த இருட்டாக இருக்கும், பயம் போவதற்காக உரத்த குரலில் நானும் நண்பனும் பாடி வருவோம்.
திருமணமான பின், நடிகர் திலகம் சிவாஜி வீட்டிற்கு சாப்பிட சென்றிருந்தோம், அப்போது சிவாஜி அவர்கள் எனக்கு அறிவுரை வழங்கினார். வசதியான வீட்டு பெண்ணை கல்யாணம் பண்ணிருக்க, சீக்கிரம் கார் வாங்கணும், பங்களா வாங்கணும் என்று அறிவுரை கொடுத்தார்.
மக்கள் திலகம் எம்.ஜி. ஆர் வீட்டிற்கும் சாப்பாட்டுக்கு சென்றிந்தோம். ஜானகி அம்மா என் மனைவியை மாடிக்கு கூட்டிப்போய், சீவி சிங்காரித்து அழைத்துவந்தார். தலைவரோடு சேர்ந்து உணவு அருந்தினோம். அப்போது, பெரிய வீட்டு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால் வசதிக்கு மீறிய செலவு செய்யாதே என்று அறிவுரை வழங்கினார். இரு பெரும் நடிகர்களும், வேறு வேறு அறிவுரையை வழங்கினார்.
நான் மருத்துவமனையில் இருந்தபோது எம்.ஜி. ஆர் நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறினார் என இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Navin Madhesh
Contact at support@indiaglitz.com