'வாரிசு' படத்தில் ஒரு சர்ப்ரைஸ் பாடல்.. மீண்டும் ஒரு 'ஆல்தோட்ட பூபதியா?

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்தே இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மாபாடல் என்ற இந்த மூன்று பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். ரஞ்சிதமே பாடலை விஜய் மற்றும் மானஸி பாடி இருந்த நிலையில் தீ தளபதி என்ற பாடலை சிம்பு பாடினார் என்பதும் அம்மா பாடலை சித்ரா பாடியிருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தில் இடம்பெற்றுள்ள இன்னொரு பாடல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன. இந்த பாடலை பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் பாடியதாகவும் இந்த பாடல் ‘யூத்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு இணையாக கேட்டவுடன் ஆட்டம் போட வைக்கும் அளவிற்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலையும் பாடியது ஷங்கர் மகாதேவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் மும்பையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த பாடல் வரும் 24ஆம் தேதி நடைபெறும் ’வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் பாடப்படும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

அரைகுறை ஆடையுடன் இன்ஸ்டா ரீல் வீடியோ: பிக்பாஸ் நடிகையை கைது செய்த காவல்துறை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் தொலைக்காட்சி நடிகையுமான ஒருவர் அரைகுறை ஆடையில் இன்ஸ்டாகிராமில் ரீலுக்காக போட்டோஷூட் எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென

சூர்யா-ஜோதிகா தம்பதியின் மகள் தியாவா இவர்? செம டான்ஸ் ஆடும் வீடியோ

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிவகுமார் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா ஜோதிகா தம்பதியின் மகள் தியா டான்ஸ் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஷாருக்கானுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: பேசிய பிரபலம் யார் தெரியுமா?

காவி நிறத்தை களங்கப்படுத்தும் ஷாருக்கானுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் அவரை நேரில் பார்த்தால் எரித்துக் கொன்று விடுவேன் என்றும் பிரபலம் ஒருவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'வாரிசு' இசை வெளியீட்டு விழா.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தமன் இசையில், தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படம் பொங்கல் முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. 

விஷாலை சந்திக்க விருப்பம் தெரிவித்தாரா முதலமைச்சர்? அரசியலில் குதிக்க திட்டமா?

சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் விஷால் தற்போது சினிமாவில் இருக்கிறேன் அடுத்தது அரசியல் தான் என்று கூறிய நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சர் அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்ததாக