close
Choose your channels

'வாரிசு' படத்தில் ஒரு சர்ப்ரைஸ் பாடல்.. மீண்டும் ஒரு 'ஆல்தோட்ட பூபதியா?

Wednesday, December 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்தே இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. ரஞ்சிதமே, தீ தளபதி மற்றும் அம்மாபாடல் என்ற இந்த மூன்று பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். ரஞ்சிதமே பாடலை விஜய் மற்றும் மானஸி பாடி இருந்த நிலையில் தீ தளபதி என்ற பாடலை சிம்பு பாடினார் என்பதும் அம்மா பாடலை சித்ரா பாடியிருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தில் இடம்பெற்றுள்ள இன்னொரு பாடல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன. இந்த பாடலை பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் பாடியதாகவும் இந்த பாடல் ‘யூத்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுக்கு இணையாக கேட்டவுடன் ஆட்டம் போட வைக்கும் அளவிற்கு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலையும் பாடியது ஷங்கர் மகாதேவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் மும்பையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த பாடல் வரும் 24ஆம் தேதி நடைபெறும் ’வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் பாடப்படும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment