மும்பையில் சூர்யாவை சர்ப்ரைஸ் ஆக சந்தித்த பிரபல நடிகை.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யாவுடன் ஒரே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த பிரபல நடிகை, தற்செயலாக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மும்பை விமான நிலையத்தில் இருக்கும் போது அங்கு வந்த சூரியாவை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு சூர்யாவின் ‘மாற்றான்’ படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இந்த ஒரு படத்தில் மட்டுமே சூர்யா மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்த நிலையில், அதன் பின் வேறு படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், தற்போது மும்பையில் ’கங்குவா’ படத்தின் ப்ரமோஷன் பணிகளில் இருக்கும் சூரியாவை காஜல் அகர்வால் தற்செயலாக விமான நிலையத்தில் சந்தித்தார். அப்போது, காஜல் அகர்வாலின் கணவர் மற்றும் குழந்தையும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொண்டு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். குறிப்பாக 'இந்தியன் 3', 'கண்ணப்பா' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Suriya with #KajalAggarwal & Family #Kanguvapic.twitter.com/fpUgi1DzC5
— Kolly Corner (@kollycorner) October 19, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments