மும்பையில் சூர்யாவை சர்ப்ரைஸ் ஆக சந்தித்த பிரபல நடிகை..  வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,October 19 2024]

சூர்யாவுடன் ஒரே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த பிரபல நடிகை, தற்செயலாக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மும்பை விமான நிலையத்தில் இருக்கும் போது அங்கு வந்த சூரியாவை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சூர்யாவின் ‘மாற்றான்’ படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இந்த ஒரு படத்தில் மட்டுமே சூர்யா மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்த நிலையில், அதன் பின் வேறு படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், தற்போது மும்பையில் ’கங்குவா’ படத்தின் ப்ரமோஷன் பணிகளில் இருக்கும் சூரியாவை காஜல் அகர்வால் தற்செயலாக விமான நிலையத்தில் சந்தித்தார். அப்போது, காஜல் அகர்வாலின் கணவர் மற்றும் குழந்தையும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொண்டு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். குறிப்பாக 'இந்தியன் 3', 'கண்ணப்பா' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தீபாவளி விருந்து: 'விடாமுயற்சி' வருகிறதோ இல்லையோ, இந்த 2 படங்களும் உறுதி..!

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும். ஆனால், இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமலஹாசன்,

சிறைக்கைதியாக ஆர்ஜே பாலாஜி.. 'சூர்யா 45' படப்பிடிப்பு எப்போது?

சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜி நடிக்கும் ஒரு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

'கோட்' படம் பார்த்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா? வெங்கட் பிரபு நெகிழ்ச்சி..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியதை அடுத்து, இயக்குனர் வெங்கட் பிரபு நிகழ்வுடன் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு

பிக்பாஸ் செளந்தர்யாவுக்கு இப்படி ஒரு காதலா? பிரேக் அப் ஆனது ஏன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சௌந்தர்யா, தான் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் ஒரு பிரச்சனை காரணமாக பிரேக் அப் செய்து விட்டதாகவும், சக போட்டியாளர்களிடம்

ஒரு வருடத்தை பூர்த்தி செய்த 'லியோ'.. லோகேஷ் கனகராஜின் நெகிழ்ச்சி பதிவு..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான "லியோ" திரைப்படம் கடந்த ஆண்டு இதே நாளில் வெளியான நிலையில், இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது