யுவன் பிறந்தநாளில் த்ரிஷா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜய் ரசிகர்களும் குஷி..!

  • IndiaGlitz, [Sunday,August 25 2024]

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் வரும் 31ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் விஜய் மற்றும் த்ரிஷா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

தளபதி விஜய் நடித்த 'கோட்’ திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் த்ரிஷா நடித்துள்ளதாகவும் அவர் ஒரு பாடலில் விஜய்யுடன் நடனம் ஆடி இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் விஜய், த்ரிஷாவின் இந்த பாடல் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் விஜய் மற்றும் த்ரிஷா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை த்ரிஷா ’கோட்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது மட்டுமின்றி சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார் என்றும் அவரது கேரக்டர் இந்த படத்தின் திருப்புமுனை ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.