பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை: ரசிகர்கள் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
‘ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும், நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த நிலையில் ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரி திவ்யா பாண்டியன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ரம்யா பாண்டியன் தற்போது நலமாக இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு வந்து விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ரம்யா பாண்டியன் விரைவில் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ரம்யா பாண்டியன் தற்போது சூர்யா தயாரிக்கும் படமொன்றில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் வாணிபோஜனும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout