நடிகர் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சையா? என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Sunday,January 05 2025]

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன், இளைய திலகம் பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போது அவர் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் பிரபு, ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது அவர் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது என கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியான செய்தியில், ‘நடிகர் பிரபு, தலைவலி மற்றும் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளை தமனியில் பிளவு ஏற்பட்ட நிலையில் வீக்கம் அல்லது பலூன் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின், பிரபு தற்போது நலமாக உள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்று விட்டார். மேலும், அவருடைய குடும்பத்தினர் அவரை கவனித்து வருவதாகவும், ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, நடிகர் பிரபு விரைவில் நலமுடன் திரும்பி சினிமாவில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

வேஷ்டி சட்டையில் அமலாபால் க்யூட் குழந்தை புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த குழந்தையின் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறதா அஜித் - தனுஷ் படங்கள்? ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..!

அஜித் நடித்த 'விடாமுயற்சி' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுக்கு பின் ரீரிலீஸ் ஆகும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்.. ரசிகர்கள் குஷி..!

கடந்த 1999 ஆம் ஆண்டு ரஜினியின் சூப்பர் ஹிட் படம் வெளியான நிலையில், அந்த படம் தற்போது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில்

இந்த வாரமும் டபுள் எவிக்சன்.. இருவருமே வைல்டு கார்டு போட்டியாளர்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்,   கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்சன் நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில்: ராமாயண வரலாற்றின் சாட்சி

தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில், ராமாயண காலத்தின் ஒரு முக்கியமான சின்னமாகத் திகழ்கிறது.