எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தில் இந்த மாஸ் நடிகரா? சூப்பர் தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,June 04 2023]

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான ’ஆர்ஆர்ஆர்’ என்ற வெற்றி திரைப்படத்திற்கு பின்னர் அடுத்ததாக அவர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் அமேசான் காடுகளில் நடக்கும் அதிரடி ஆக்சன் படம் என்றும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

மகேஷ்பாபு தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை முடித்தவுடன் அவர் எஸ்.எஸ்.ராஜமௌலி படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்த படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மோகன்லாலின் தீவிர ரசிகர் என்று தன்னை பலமுறை எஸ்.எஸ்.ராஜமெளலி கூறி இருக்கும் நிலையில் தற்போது மோகன்லாலை தனது படத்தில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான ’பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களில் மோகன்லாலை நடிக்க வைக்க அவர் முயற்சி செய்ததாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் அது முடியாமல் போனதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மகேஷ் பாபு படத்தில் மோகன்லால் இணைந்து இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.