நடிகர் பாக்யராஜுக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன்

  • IndiaGlitz, [Friday,November 29 2019]

நடிகர் பாக்யராஜ் சமீபத்தில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 2ஆம் தேதி நேரில் ஆஜராக மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பாக்கியநாதன் சம்மன் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட கே பாக்யராஜ் அவர்கள் பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். குறிப்பாக பொள்ளாச்சி பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்தும், பெண்களை விமர்சித்தும் பாக்யராஜ் பேசியதற்கு பெண்கள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு நேரில் விசாரணை செய்ய தமிழ்நாடு மகளிர் ஆணையம் சமயம் சம்மன் அனுப்பி உள்ளது

பாக்யராஜ் பேசியதில் ’ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது’ என்று பேசியதுதான் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு பெண்களே காரணம் என்ற ரீதியில் இந்த கருத்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆந்திர மாநில மகளிர் ஆணையம் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு மகளிர் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியிருந்தது.

ஆந்திர மகளிர் ஆணையம் தமிழக மகளிர் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்போது இதுகுறித்து விசாரிக்க பாக்யராஜ் அவர்களுக்கு டிசம்பர் 2 ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது

பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாக்யராஜ் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழக மகளிர் ஆணையம் முயற்சி செய்யும் என தமிழக மகளிர் ஆணையத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

More News

தேசம் எப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பானதாக அமையும்: பிரியங்கா ரெட்டி கொலை குறித்து பிரபல நடிகை 

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கிய உள்ளது.

3 மாஸ் சேர்ந்ததால் 'தெறி மாஸ்' ஆகிருச்சு: 'தலைவர் 168' குறித்து பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக இருக்கும் நிலையில், அவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான 'தலைவர் 168' திரைப்படத்தின்

வெற்றிடம் இருப்பது உண்மைதான், ஒப்புக்கொள்கிறேன்: நடிகர் விவேக்

கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் காலத்தில் பிறர் மனதை புண்படுத்தாத வகையில் உண்மையான நகைச்சுவை காட்சிகள் இருந்தன. ஆனால் தற்போது உருவத்தை கேலி

சென்னை தொழிலதிபராக மாறிய மணிரத்னம் பட நாயகி!

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய 'காற்று வெளியிடை' என்ற படத்தின் நாயகியாகவும் அதன் பின்னர் அவர் இயக்கிய 'செக்கச் சிவந்த வானம்' என்ற படத்தில்

 ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் பிக்பாஸ் நடிகையின் 'த்ரில்' படம்

விஜய் சேதுபதி நடித்த 'புரியாத புதிர்' மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி.