'தளபதி 64' தயாரிப்பில் திடீர் மாற்றம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் ஒரு பக்கம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் 64வது படமான ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ’தளபதி 64’ படத்தின் தயாரிப்பாளர் மாறிவிட்டதாக ஒரு வதந்தி இணையதளங்களில் பரவியது. இந்த வதந்திக்கு விளக்கம் அளித்த தயாரிப்பு நிறுவனம், ’தளபதி 64’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் எனவே இந்த படம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய பணி செய்து கொண்டிருந்த லலித் என்பவர் தற்போது இணை தயாரிப்பாளராக மாறி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி ஆகிவிட்டதாகவும், ஏற்கனவே விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரித்து வந்த படத்தின் தயாரிப்பில் தற்போது லலித் இணைந்துள்ளதாகவும், விஜய்யின் சம்மதத்தின்பேரிலே இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments