அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது: மருத்துவமனையில் இருக்கும் பிரகாஷ்ராஜ் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் தனது வீட்டில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.
சின்னதாக விழுந்துவிட்டேன், சின்னதாக எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சிறிய அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத் செல்கிறேன். எனது நண்பர் மருத்துவர் குருவாரெட்டி பாதுகாப்பாக அறுவை சிகிச்சை செய்வார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. யாரும் கவலைப்பட வேண்டாம் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் சற்று முன் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டது. எனது நண்பர் டாக்டர் குருவா ரெட்டி அவர்களுக்கு நன்றி. நான் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து அனைவருக்கும் நன்றி. விரைவில் மீண்டும் படப்பிடிப்புக்கு வருவேன் என்று பதிவுசெய்துள்ளார். மேலும் அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனை படுக்கையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The ?? devil is back… successful surgery.. thank you dear friend Dr #guruvareddy and ?????? thank you all for your love n prayers.. back in action soon ???? pic.twitter.com/j2eBfemQPn
— Prakash Raj (@prakashraaj) August 11, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments