பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சரமாரி அடி-உதை: விளையாட்டால் உயிர் போன பரிதாபம்!

  • IndiaGlitz, [Friday,May 03 2019]

இந்த தலைமுறையினர்களின் புதுப்புது கலாச்சாரங்களில் ஒன்று பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது 'பர்த்டே பம்ப்ஸ்' செய்வது. அதாவது பிறந்த நாள் கொண்டாடும் நபரை சுற்றி நின்று அவருடைய நண்பர்கள் வெளுத்தெடுப்பதுதான் இந்த பர்த்டே பம்ஸ்.

இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் பிறந்த நாளை கொண்டாடியபோது அவரை அவருடைய நண்பர்கள் சுற்றி நின்று வெளுத்தெடுத்தனர். அடி வாங்கிய அந்த மாணவரும் இயல்பாகத்தான் இருந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானபோது அனைவரும் ஜாலியாகத்தான் எடுத்து கொண்டனர். ஆனால் மறுநாள் கடுமையான வயிற்றுவலியால் மருத்துவமனையில் பிறந்த நாள் கொண்டாடிய அந்த வாலிபர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

அந்த மாணவரின் பிரேத பரிசோதனையில் உடலில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் உயிர் இழந்தது தெரியவந்தது. அவருடைய நண்பர்கள் விளையாட்டிற்காக பிறந்தநாளின் போது அடித்ததால் தான் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வீடியோவை பதிவு செய்த வழக்கறிஞர் ஒருவர் 'தயவு செய்து உங்கள் பிள்ளைகளுக்கு பர்த்டே பம்ப்ஸில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்குங்கள், இல்லையெனில் இதற்கும் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.

பிறந்த நாள் என்றால் அம்மா அப்பாவிடம் ஆசி பெற்று கோவிலுக்கு சென்று வந்த முந்தைய தலைமுறையின் கலாச்சாரம் மீண்டும் மாற வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.