எங்களுக்கு கூர்க்கா (செளகிதார்) தேவையில்லை: ஒரு இளைஞரின் ஆவேச பேச்சு!

கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் அனைவரும் தங்களை செளகிதார் என்று அழைத்து வருகின்றனர். செளகிதார் என்றால் பாதுகாப்பவர், பாதுகாவலன் என்ற பொருள் என்பதால் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஒரு இளைஞர், 'பிரதமர் மோடி எங்களை பக்கோடா விற்க சொல்கிறார். ஆனால் அவரை அவரே பாதுகாவலர் என்று கூறிக்கொள்கிறார். எங்களுக்கு காவலன்தான் வேண்டும் என்றால் நாங்கள் நேபாளம் நாட்டில் இருந்து கூர்க்காவை வரவழைத்து கொள்வோம். அங்கு நிறைய கூர்க்காக்கள் இருக்கிறார்கள்.

ஆனால் எங்களுக்கு கூர்க்காக்கள் தேவை இல்லை. எங்களுக்கு தேவை ஒரு நல்ல பிரதமர்தான். முன்னாள் ஆட்சி செய்தவர்கள் எல்லோரும் நாட்டை சீரழித்துவிட்டார்கள் என்று மோடி கூறுகிறார். ஆனால் அவர் பிறப்பதற்கு முன்னே பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தையும், பக்ரா நங்கல் அணையையும் கட்டியது முன்னாள் ஆட்சியாளர்கள் தான் என்பதை அவர் மறக்க கூடாது.

இவ்வாறு இந்த இளைஞர் ஆவேசமாக பேசிய வீடியோ நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.
 

More News

சென்னையில் நீதிபதி கண்முன் மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வருவதுண்டு. எனவே குடும்ப நல நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்படும்

சன் குழுமத்துடன் மீண்டும் இணைந்த தளபதி விஜய்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

நட்சத்திர வேட்பாளர் தொகுதி: தூத்துகுடி குறித்த ஒரு பார்வை

ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடந்தாலும் ஒருசில தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக பார்க்கப்படும்

அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

திமுக தேர்தல் அறிக்கை வெளியான சில நிமிடங்களில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் தற்போது வெளிவந்துள்ளது.

ஆமை புகுந்த வீடு! வைகோவை கலாய்க்கும் பிரபல தயாரிப்பாளர்

கடந்த சில ஆண்டுகளாகவே வைகோ உள்ள கூட்டணி வெற்றி பெறாது என்றே தமிழக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதுண்டு.