விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடிய ரசிகர்கள்: எங்கே தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்து உள்ளது என்பதும் தெரிந்ததே.
இன்னும் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக வெளியான அனைத்து திரையரங்கிலும் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதும் தற்போது குடும்ப ஆடியன்ஸ்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கம் சென்று ’மாஸ்டர்’ படத்தை பார்த்து ரசித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்ததே. அந்த வகையில் ’மாஸ்டர்’ படத்தை பார்த்து ரசித்த கர்நாடக மாநில ரசிகர்கள் விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
விஜய்க்கு சிலை வைத்து அதற்கு மாலை போட்டு கர்நாடக மாநில ரசிகர்கள் கொண்டாடிய காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு சிலை வைக்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பாக அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
For The First Time Ever In Karnataka State Thalapathy Vijay #Master
— ILANGO (@ilangokp) January 17, 2021
Statue By Karnataka Online Samuel & Team ( @kaonline_vmi )
MASTER REVIVES INDIAN BO #Master #MasterFilm @actorvijay pic.twitter.com/brgZfmYXEL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com