முன்னாள் பி.ஆர்.ஓவின் கருத்துக்களை நம்ப வேண்டாம்: விஜய் தரப்பு அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் பி.ஆர்.ஓஆக இருந்த ஒருவர் சமீபத்தில் அளித்த ஒருசில பேட்டிகளில் விஜய்யுடன் ஒருசில நடிகர்களை ஒப்பிட்டும், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். இந்த பேட்டி மற்ற நடிகர்களின் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நமது தளபதி விஜய் அவர்களின் முன்னாள் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாக பணிபுரிந்தவர் தற்போது வேறு சில காரணங்களால் அப்பணியில், நமது தளபதி விஜய் அவர்களுடன் இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.
மேலும், அவர், நமது மக்கள் இயக்கதில் யாதொரு பொருப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை !
இருப்பினும், தளபதி விஜய் அவர்கள் பெயரை பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்த கருத்தை, தளபதி விஜய் அவர்களின் கருத்தை போல் ஊடகங்களில் வெளியிடுவதை நமது மதிப்புமிகு தளபதி விஜய் அவர்கள் ஏற்க்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
அதோடு, நமது தளபதி விஜய் அவர்கள் எந்த காலக்கட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பீட்டு பேசியதில்லை ! அப்படி யாரையும் பேச சொல்லி யாருக்கும் நமது தளபதி விஜய் அவர்கள் அதிகாரம் அளிக்கவில்லை என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ஆகவே, தளபதி விஜய் குறித்த தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துக்களை யாரும் நம்பவேண்டாம் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com