சூர்யாவின் பெண் ரசிகைகளுக்கு ஸ்பெஷல் காட்சி: எந்த தியேட்டரில் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,May 24 2019]

பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்த நடிகர்களின் பெண் ரசிகைகளுக்கு என ஒரு ஸ்பெஷல் காட்சி திரையிடப்படுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் வரும் 31ஆம் தேதி வெளியாகும் சூர்யாவின் 'என்.ஜி.கே' திரைப்படத்திற்கும் ஒரு ஸ்பெஷல் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூர்யாவுக்கு தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களை போலவே கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்பது தெரிந்ததே. அந்த வகையில் வரும் 31ஆம் தேதி கேரளாவிலும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் கேரள மாநிலம் செங்கரம்குளம் என்ற பகுதியில் உள்ள மார்ஸ் சினிமாஸ் என்ற திரையரங்கில் பெண்களுக்கு என இந்த படம் சிறப்புக்காட்சி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள சூர்யாவின் பெண் ரசிகைகள் இந்த படத்தை முதல் நாளிலேயே பார்க்க உற்சாகத்துடன் உள்ளனர்.