சிம்ரனுக்கு முத்தம் கொடுத்த காதல் கணவர்: இன்று அவருக்கு ஸ்பெஷல் நாளாம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சிம்ரனுக்கு அவரது காதல் கணவர் தீபக் முத்தம் கொடுத்த புகைப்படம் சிம்ரனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 90கள் மற்றும் 2000களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவர் கடந்த 2003ஆம் ஆண்டு தனது பள்ளி கால தோழர் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் சமீபத்தில் சிம்ரன் மகன்களின் புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தந்தையர் தினத்துடன் சிம்ரனுக்கு மட்டும் கூடுதலாக ஒரு ஸ்பெஷல் நாளாக அமைந்துள்ளது. அதாவது இன்று சிம்ரன் கணவர் தீபக்கின் பிறந்த நாள்.
கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு சிம்ரன் தனது இன்ஸ்டாகிராவில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வாழ்த்து கூறிய மனைவிக்கு தீபக் முத்தம் கொடுக்கும் புகைப்படமும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
நடிகை சிம்ரன் நடிப்பில் உருவான ‘ராக்கெட்டரி’, ‘அந்தகன்’, ‘கேப்டன்’, ‘துருவநட்சத்திரம்’, ’வணங்காமுடி’ ஆகிய படங்கள் விரைவில்அடுத்தடுத்து வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments