பிறந்த நாளில் த்ரிஷாவுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த 'லியோ' படக்குழு..! வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் த்ரிஷா பிறந்த நாளை குறித்த ஹேஸ்டேக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் த்ரிஷா நடித்து வரும் படங்களில் ஒன்றான ’லியோ’ படத்தின் குழுவினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். விஜய்யுடன் த்ரிஷா இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படம் அவரது பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ட்ரீட் ஆக கருதப்படுகிறது.
இந்த பதிவில் ’த்ரிஷாவுடன் பணிபுரிவது ஒரு முழுமையான மகிழ்ச்சி என்றும் மகிழ்ச்சியும் கருணையும் பிரகாசிக்கும் மற்றொரு வருடத்தை எதிர்கொண்டுள்ள த்ரிஷாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ’அழகிய தாய் மொழி இவள், இவள் சிரிக்கையில் இரவுகள் பகலாகும்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ’லியோ’ உங்கள் 67வது படம் என்பதை அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சிyஉம் ஆச்சரியமும் அடைகிறோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த படம் தளபதி விஜய்யின் 67வது படம் என்ற நிலையில் த்ரிஷாவின் 67வது படம் என்பது விஜய் மற்றும் ’லியோ’ ஆகிய இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு ஆச்சரியமான தகவலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
It’s an absolute delight to work with you ❤️
— Seven Screen Studio (@7screenstudio) May 4, 2023
Cheers to another year of radiating joy & kindness!
Happy Birthday @trishtrashers mam!
Alexa play this portion from ‘Arjunaru Villu’ 🤩
‘Azhagiya thaai mozhi ival.. Ival sirikkayil iravugal pagal..’
We @7screenstudio are very happy… pic.twitter.com/1613v3jJKq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com