'டங்கமாரி' ஸ்டைலில் ஒரு தர லோக்கல் குத்துப்பாட்டு.. தனுஷ் அடுத்த படத்தில் சம்பவம் செய்யும் ஏஆர் ரஹ்மான்..!

  • IndiaGlitz, [Saturday,September 09 2023]

தனுஷின் அடுத்த திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ’டங்கமாரி’ பாடல் போன்ற ஒரு தர லோக்கல் குத்து பாட்டு இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் நடித்து இயக்கி வரும் ’D50’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியா ஸ்டுடியோ ஒன்றில் நடந்து வருகிறது. இந்த படத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைத்து படப்பிடிப்பை தனுஷ் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் தனுஷ் நடித்த ’அனேகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’டங்கமாரி’ பாடல் போன்ற ஒரு தர லோக்கல் குத்து பாட்டு இந்த படத்தில் இடம் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் தனுஷ் மற்றும் ஏஆர் ரகுமான் இணைவதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

’ராயன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்திப் கிஷான், துஷாரா விஜயன், துல்கர் சல்மான், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருவதாகவும் வடசென்னை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாகி வருவதாகவும் கூறப்பட்டது.