இப்படி ஒரு ரிகார்டிங் வேர்ல்டிலேயே நடந்ததில்லை: 'மரண மாஸ்' தலைவர் குத்து குறித்து அனிருத்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ரஜினியின் ரசிகர்களுக்கு வெளிவரவுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'மரண மாஸ் தலைவர் குத்து' பாடல் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்த குத்து பாடலை வரவேற்க ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சற்றுமுன் அனிருத் இந்த பாடலை பதிவு செய்யும்போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சில இளைஞர்கள் பல்வேறு இசைக்கருவிகளை பயன்படுத்தி அடித்த இசை காதை பிளக்கும் வகையில் உண்மையிலேயே மரண மாஸ் ஆக உள்ளது. இப்படி ஒரு ரிகார்டிங் வேர்ல்டிலேயே நடந்திருக்காது என்று அனிருத் இறுதியில் கூறுகின்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
A sneak peek into the #MakingOfMaranaMass ! Get ready for #ThalaivarKuththu Today at 6pm!@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @Nawazuddin_S @SasikumarDir @trishtrashers @Lyricist_Vivek pic.twitter.com/TrTIPh2rhR
— Sun Pictures (@sunpictures) December 3, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com