நகுல் மனைவி கன்னத்தில் பளாரென விழுந்த அறை: அடித்தது யார் தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,July 20 2022]
நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி கன்னத்தில் பளாரென விழுந்த அறை குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நடிகர் நகுல் கடந்த 2016ஆம் ஆண்டு தனது நீண்டகால காதலி ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அகிரா மற்றும் அமோர் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் தனது இரண்டாவது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது முதல் குழந்தை அகிராவும் தாய்ப்பால் வேண்டும் என்று கேட்டதாகவும், சில நிமிடங்கள் பொறுத்திரு என்று நான் கூறியபோது திடீரென ஆத்திரமடைந்த அகிரா எனது கன்னத்தில் அடித்ததாகவும் அவர் கூறினார்.
நான் அப்போது எதுவும் சொல்லாமல் அகிராவின் நிலைமையை புரிந்து கொண்டேன். நீ பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்தாய், அதனால் தான் சில நிமிடம் வெயிட் பண்ண சொன்னேன் என்று நான் கூறியதும், சிறிது நேரம் கழித்து அகிரா தனது தவறை உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தொடர்ச்சியாக அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்ததை அடுத்து அகிரா தனது தவறை உணர்ந்து கொண்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
அகிரா இதுவரை என்னிடம் மன்னிப்பு கேட்டது இல்லை என்ற நிலையில் முதல் முதலாக அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டதை பார்த்ததும் என்னுடைய கண்களும் கலங்கிவிட்டன. அதன்பிறகு அகிராவை நான் சமாதானப்படுத்தினேன்
அதன்பிறகு நாங்கள் டிவி பார்த்துக்கொண்டே கேக் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது மீண்டும் அகிரா சாரி என்று கேட்டார். எதற்காக மீண்டும் மீண்டும் சாரி கேட்கிறார் என்று நினைத்த போது தான் என்னுடைய டீசர்ட்டில் அகிரா சாக்லேட் சாப்பிட்ட கறை படிந்ததற்காக சாரி கேட்டுள்ளார் என்பது தெரியவந்தது. என்னுடைய டிசர்ட்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் கறை படியவைக்க அகிராவுக்கு உரிமை உள்ளது என்பதால் இதற்கெல்லாம் சாரி கேட்க வேண்டாம் என அகிராவிடம் கூறினேன் என ஸ்ருதி இந்த சம்பவத்தை சுவராசியமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.