நடிகை சாயாசிங் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

  • IndiaGlitz, [Wednesday,May 15 2024]

நடிகை சாயா சிங் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்த நிலையில் அதிரடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல கன்னட நடிகை சாயா சிங் தனுஷ் நடித்த ’திருடா திருடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை அடுத்து ’கவிதை’ ’அருள்’ ’அம்மா அப்பா செல்லம்’ ’ஜெயசூர்யா’ ’திருப்பாச்சி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் ’வல்லமை தாராயோ’ 'உயிரே உயிரே ’’உள்குத்து’ ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ’தமிழரசன்’ போன்ற நடித்த சாயாசிங் தற்போது ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சாயாசிங் பெங்களூரில் தனது தாயார் வீட்டில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டது. 66 கிராம் தங்க நகை மற்றும் 150 கிராம் வெள்ளி நகைகள் திருடு போனதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சாயாசிங் வீட்டில் வேலை செய்து வந்த உஷா என்ற வேலைக்கார பெண் தான் நகைகளை திருடினார் என தெரிய வந்தவுடன் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.