தனுஷின் 'ராயன்' படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை.. சொன்னது யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் குறித்த வதந்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
தனுஷ் கதை, திரைக்கதை, எழுதி நடித்து இயக்கி வரும் ‘ராயன்’ திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் தனுசுக்கு சொந்தமானது இல்லை என்றும் அவரது சகோதரர் செல்வராகவன் தான் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்ததாகவும் வதந்தி பரவி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் செல்வராகவன் ஒரு கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் அவர் தான் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து இருப்பார் என்று ரசிகர்களும் சிலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ள செல்வராகவன் தனுஷின் 50வது படமான ‘ராயன்’ படத்தின் ஸ்கிரிப்ட் நான் எழுதியதாக வெளிவந்திருக்கும் செய்தி உண்மையானது அல்ல என்றும் ‘ராயன்’ படத்தின் ஸ்கிரிப்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இதன் மூலம் தெளிவுபடுத்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது முழுக்க முழுக்க தனுஷின் கனவு ஸ்கிரிப்ட் என்றும் அவர் சொந்தமாகவே இந்த படத்தின் கதை திரைக்கதை எழுதிய உள்ளார் என்றும் இந்த படத்தில் நான் ஒரு நடிகனாக மட்டுமே எனது பங்களிப்பை தந்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் உங்கள் அனைவரையும் போல நானும் என் சகோதரனின் ‘ராயன்’ படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளேன் என்றும் அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு பார்த்து நான் பெருமை கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Friends , heard reports that I have written the script for D 50 RAAYAN. I clarify that I have NOTHING to do with ‘ RAAYAN ‘ s script or scripting process. It’s purely @dhanushkraja s dream script and now he has made it in to his own film. I am merely an actor in this project 🙏🏼
— selvaraghavan (@selvaraghavan) February 20, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments