பீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் பீட்டர்பால் அவர்களிடம் இருந்து பிரிந்து விட்டதாக வனிதா உருக்கமான ஒரு வீடியோவை பதிவு செய்தார் என்பதும் அந்த வீடியோ பயங்கரமாக வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் மூன்றாவது திருமணமும் முறிவடைந்ததை அடுத்து, புதிதாக ஒரு அதிரடி நடவடிக்கையை வனிதா எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதுதான் அவர் பாஜகவில் சேர இருப்பதாக ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது
ஏற்கனவே சமீபத்தில் குஷ்பு பாஜகவை சேர்ந்த நிலையில் வனிதாவும் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் இந்த வதந்தி உண்மையாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
தேர்தல் சமயத்தில் பொதுவாக திரை நட்சத்திரங்களை கட்சிக்கு கொண்டுவருவதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் வழக்கமாக செயல்பட்டு வரும். ஆனால் இம்முறை வித்தியாசமாக பாஜக அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டது
திரை உலகில் உள்ள பல நட்சத்திரங்களை பாஜகவில் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் வனிதா பெயர் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திரை நட்சத்திரங்களால் ஒரு கட்சிக்கு வாக்கு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். ஆனால் அதே நேரத்தில் அந்த நட்சத்திரங்களால் கூட்டத்தை கூட்ட முடியும் என்பதும் அவர்கள் பேசுவதை அனைத்து மீடியாக்களும் கவர் செய்யும் என்பதும் அந்தந்த கட்சிகளுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் சர்ச்சைக்குரியவராக விமர்சனம் செய்யப்படும் வனிதா பாஜகவில் சேர்வாரா? அப்படியே சேர்ந்தாலும் அக்கட்சிக்கு பிளஸ் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments