பிரபல தமிழ் நடிகரின் மனைவியை கட்டி போட்டு 200 பவுன் நகை கொள்ளை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் நடிகரின் மனைவியை கட்டி போட்டு 200 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான ‘அவன் இவன்’ என்ற படத்தில் வில்லனாகவும் ’எல்லாம் அவன் செயல்’ ’புலிவேஷம்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் நடிகர் ஆர்கே என்று அழைக்கப்படும் ராதாகிருஷ்ணன்.
இவர் சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இவருடைய மனைவி ராஜி சமீபத்தில் வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர்கள் 3 பேர் வீட்டினுள் புகுந்து ராஜியை கட்டிப் போட்டுவிட்டு 200 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொள்ளையில் ஆர்கே வீட்டின் காவலாளியும் உடந்தை என்று என்பது சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து காவலாளி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com