தமிழக கவர்னரிடம் இருந்து பிரேம்ஜிக்கு கிடைத்த பெருமை.. வீடியோ வைரல்..!
- IndiaGlitz, [Friday,December 06 2024]
தமிழக கவர்னர் ஆர்.என் ரவி அவர்கள் கலந்து கொண்ட விழாவில் நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரனுக்கு பெருமை சேர்க்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 ஆவது நினைவு தின விழா இன்று சென்னையில் நடந்த நிலையில், இந்த விழாவில் தமிழக கவர்னர் கலந்து கொண்டார். இந்த விழாவில் சாதனை செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், தமிழ் திரை உலகில் காமெடி நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என்ற வகையில் கவர்னர் ரவி அவர்களிடம் இருந்து பாராட்டு சான்றிதழ் பிரேம்ஜி அமரனுக்கு அளிக்கப்பட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இதே விழாவில் பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கவர்னர் இடமிருந்து சான்றிதழ் பெற்ற பிரேம்ஜி அமரனுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.