கொரோனா பரவலை தடுக்க புது டெக்னிக்… அசத்தல் ஐடியாவிற்கு குவியும் பாராட்டு!
- IndiaGlitz, [Saturday,October 23 2021]
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆடம்பர உணவகம் ஒன்றில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கு, விளக்குகளை கொண்டு உருவாக்கப்பட்ட மூங்கில் குவிமாடம் ஒவ்வொரு தனிமனிதர்களுக்கும் பாதுகாப்பு கவசம் போல பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டெக்னிக் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சோஷியல் மீடியாவில் இந்தத் தகவல் வைரலாகி வருகிறது.
கொரோனா நேரத்தில் நூற்றுக்கணக்கான தொழில்கள் மோசமான முறையில் பாதிப்படைந்தது. அதிலும் உணவகம் வைத்திருக்கும் பலரது நிலைமை கேள்விக்குறியானது. சாலையோரத்தில் உணவகம் வைத்திருப்பவர்களும் கடைகளை மூடிவிட்டு வேறு தொழில்களை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் கொரோனா நேரத்தில் ஹோட்டல் தொழிலை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் ஜப்பான் நாட்டிலுள்ள செயின் ஹோஷினோயா எனும் ஆடம்பர உணவகம் புது டெக்னிக் ஒன்றை பின்பற்றி வருகிறது.
இதற்காக அந்த உணவகம் பாரம்பரிய முறையில் புதிய தொழில் நுட்பத்துடன் புது டெக்னிக் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. அதாவது மின் விளக்குகள் பொருத்தப்பட்ட மூங்கில் குவிமாடத்தை அந்த ஹோட்டலுக்கு வரும் ஒவ்வொரு தனிமனிதர்களுக்கும் பாதுகாப்பு கவசம் போல அணிவிக்கின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் இல்லாமல் ஒருவருக்கொருவர் பார்த்தபடி உணவை சுவைக்க முடியும் என்றும் அந்த உணவகம் கருத்துத் தெரிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டில் கடந்த 18 ஆம் நூற்றாண்டில் இருந்து இந்த மூங்கில் குவிமாடம் பழக்கத்தில் இருந்துவரும் நிலையில் தற்போது கொரோனா காலத்தில் புது தொழில்நுட்பத்தின் தொற்றுநோய் கவசமாகவும் மாறியிருக்கிறது. இதனால் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.