கமல் பாடலை ரிலீஸ் செய்யும் லோகேஷ் கனகராஜ்!

உலகநாயகன் கமலஹாசன், அமலா நடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய திரைப்படம் ’சத்யா’. கடந்த 1988ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பதும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சத்யா என்ற அதே பெயரில் அரவிந்த் ஸ்ரீதர் என்பவர் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து உலக நாயகன் கமலஹாசன் நடித்த சத்யா படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் படமாக்கப்பட்ட அதே லொகேஷனில் ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கமலஹாசன் அவர்கள் திரையுலகிற்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த பாடல் வரும் 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பாடலை ’மாஸ்டர்’ திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளதை அடுத்து கமல் ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.