சூரரை போற்று.. யாரோட வாழ்க்கை கதை தெரியுமா..!?

  • IndiaGlitz, [Tuesday,January 07 2020]

நடிகர் சூர்யா தற்போது சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவின் 38-வது திரைப்படமாக உருவாகியிருக்கும் இதனை ‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அபர்ணா பாலமுரளி நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்துடன் இணைந்து, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியிருந்த நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியாகி வைரலாக பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ளது. படத்தின் டீசரில் இது உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த விஷயம் படம் தொடங்கும் போதே வெளியான தகவல் தான். இருந்தாலும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

கேப்டன் ஜி.ஆர். கோபிநாத். இவர் ஏர் டெக்கன் விமான நிறுவனத்தினை உருவாக்கியவர். கர்நாடகாவில் கோரூர் கிராமத்தில் பிறந்த இவர் பள்ளி கல்வி முடித்த பிறகு இந்திய ராணிவத்தில் கேப்டனாக 8 ஆண்டுகள் பணியாற்றினார். பங்களாதேஷ் லிபரேஷன் போரில் சிறப்பாக பங்காற்றிய கேப்டன்களுள் ஒருவர். அதன் பிறகு தனது 28வது வயதில் இராணுவத்தை விட்டு விலகி விவசாயம், ஹோட்டல் என பல தொழில்கள் பார்த்து 1997-ல் டெக்கான் ஏவியேஷன் எனும் சார்ட்டர் ஹெலிகாப்டர் கம்பெனியை தொடங்கினார். பின்னர் 2003ல் ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவி குறைந்த விலையில் விமான சேவை என விளம்பரத்தோடு நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 2007-ல் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸுடன் இணைந்தது.

அதன் பிறகு 2009-ல் லோக் சபா தேர்தலில் சுயேட்சையாக நின்று தோல்வியை தழுவினார். பின்னர் 2014 ஆம் ஆத்மீ கட்சியில் இணைந்தும் தேர்தலை சந்தித்து தோற்றார். இவர் எழுதிய சிம்ப்ளி ஃப்ளை புத்தகம் ஒரு விமான நிறுவனம் தொடங்க இவர் சந்தித்த சிக்கல்களை சொல்கிறது. ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து விமான சேவை நிறுவனம் வரை சென்ற சுவாரஸ்யமான கதை கோபிநாத் உடையது. இந்த கதையில் சூர்யா சரியாக பொருந்தியிருக்கிறார் என படம் பார்க்கும் பொது நமக்கு தெரியும். படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியிடப்பட உள்ளது.

More News

நயன்தாராவின் அடுத்த படத்தில் 'பிகில்' பட நடிகை 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த 'தர்பார்' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிவரும்

பிரபல இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா-கார்த்தி! பரபரப்பு தகவல்

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. 

சரியான நேரம் வந்தால் அஜித்துடன் படம் பண்ணலாம்..! ஏ. ஆர். முருகதாஸ் பேட்டி.

அஜித்தும் நானும் சரியான சந்தர்ப்பத்தில் இணைவோம் எனத் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

பெண்கள் விளையாட்டில் பங்கு கொள்ளும்போது அதிக நன்மைகளைப் பெற முடியும்

பொதுவாக இந்தியச் சமூகங்களில் பெண்களுக்கான வாழ்வியல் முறைகளில் இருந்து விளையாட்டு பெரும்பாலும் தள்ளி வைக்கப்படுகிறது

'நான் சிரித்தால்' டிரைலரை பார்த்து தளபதி விஜய் கூறிய கமெண்ட்!

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'நான் சிரித்தால்' என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் நாயகன் ஆதிக்கு சிரிக்கும் வியாதி இருப்பதால்