திமுக ஆ.ராசா மனைவி காலமானார்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுகவின் துணைப்பொதுச்செயலாளரான ஆ.ராசா அவர்களின் மனைவி, திருமதி. பரமேஸ்வரி இன்று காலமானார்.
ஆ.ராசா அவர்களின் மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பிலிருந்து, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்தார்.
தமிழக முதல்வரான ஸ்டாலின் அவர்கள் கடுமையான பணி நெருக்கடியிலும், நேற்று முன்தினம் ராசாவின் மனைவியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் கூறியுள்ளார். விரைவில் குணமாகிவிடுவீர்கள் என்றும், மருத்துவத்திற்கு தேவையான உதவிகளை செய்கிறேன், நம்பிக்கையாக இருங்கள் என்றும் ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments