ரூ.1 லட்சத்திற்கு விற்ற ஒரு கிலோ டீத்தூள்… அப்படியென்ன ஸ்பெஷல்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அசாம் மாநிலத்தில் விளைந்த அரியவகை தேயிலை தூள் ஒரு கிலோ 99,999 ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது. இதற்கு முன்பு 75 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட இந்தத் தூளை இந்த ஆண்டு ஏலத்தின் மூலம் இதுவரை இல்லாத அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
அசாம் மாநிலத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்தத் தோட்டங்களில் விளையும் தேயிலை பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விளையும் 52% தேயிலை பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அசாம் மாநிலம், கவுகாத்தியில் நடைபெற்ற தேயிலை ஏல விற்பனையில் அரியவகை மனோகரி எனப்படும் கோல்டன் டீத்தூள் ரூ.99,999 க்கு விற்பனை ஆகியிருக்கிறது. இந்த வகை டீத்தூள்களை வெளிநாட்டின் அதிகம் விரும்பி குடிப்பதாக நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் அசாம் பகுதியில் உள்ள 850 க்கும் அதிகமான சிறிய, பெரிய தேயிலைத் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலை செய்துவருகின்றனர். அவர்களுக்கும் இந்தப் பலன் சேர வேண்டும் என்று தேயிலை தோட்ட நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments