ரூ.1 லட்சத்திற்கு விற்ற ஒரு கிலோ டீத்தூள்… அப்படியென்ன ஸ்பெஷல்?

  • IndiaGlitz, [Wednesday,December 15 2021]

அசாம் மாநிலத்தில் விளைந்த அரியவகை தேயிலை தூள் ஒரு கிலோ 99,999 ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது. இதற்கு முன்பு 75 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட இந்தத் தூளை இந்த ஆண்டு ஏலத்தின் மூலம் இதுவரை இல்லாத அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

அசாம் மாநிலத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்தத் தோட்டங்களில் விளையும் தேயிலை பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விளையும் 52% தேயிலை பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அசாம் மாநிலம், கவுகாத்தியில் நடைபெற்ற தேயிலை ஏல விற்பனையில் அரியவகை மனோகரி எனப்படும் கோல்டன் டீத்தூள் ரூ.99,999 க்கு விற்பனை ஆகியிருக்கிறது. இந்த வகை டீத்தூள்களை வெளிநாட்டின் அதிகம் விரும்பி குடிப்பதாக நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் அசாம் பகுதியில் உள்ள 850 க்கும் அதிகமான சிறிய, பெரிய தேயிலைத் தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலை செய்துவருகின்றனர். அவர்களுக்கும் இந்தப் பலன் சேர வேண்டும் என்று தேயிலை தோட்ட நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

More News

'போலீஸ் பத்தி அவதூறு கிளப்புறதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்கு': பா ரஞ்சித்தின் அடுத்த பட டிரைலர்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த படமான 'ரைட்டர்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் திலீபன்,

'அப்பா, நான் உன்னை ஜெயிக்க வைப்பேன்': அதர்வா அடுத்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வா நடிக்கும் அடுத்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை மாணவியின் வாழ்க்கையை மாற்றிய தமிழ் நடிகர்: குவியும் வாழ்த்துக்கள்

ஏழை மாணவி ஒருவரின் இங்கிலாந்து படிப்புக்கு முழு செலவையும் தமிழ் நடிகர் ஒருவர் ஏற்றிருந்த நிலையில் அந்த மாணவி தற்போது பட்டம் பெற்றுள்ளார். இதுகுறித்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': 'வாடா தம்பி பாடல் வைரல்

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும்

சொந்த கிராமத்திற்காக 'யார்க்கர்' நடராஜன் செய்த மகத்தான உதவி!

சொந்த கிராமத்தின் இளைஞர்களுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் மன்னன் நடராஜன் செய்த மகத்தான செயல் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.