ஐபிஎல்- போட்டியில் இப்படியுமா? கன்னத்தில் அறைந்ததாக முன்னணி வீரர் பகீர் குற்றச்சாட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் ஒருவர் தன்னை 3-4 முறை கன்னத்தில் அறைந்ததாக நியூசிலாந்து முன்னணி வீரர் ராஸ் டெய்லர் பகீர் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
38 வயதான ராஸ் டெய்லர் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்து வந்தார். இவர் 16 ஆண்டுகாலம் நியூசிலாந்து அணிக்காக விளையாடிய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் தனக்கு நிறவெறி கொடுமைகள் நடந்ததாகக் குற்றம் சாட்டிய அவர் இதுகுறித்து “ராஸ் டெய்லர்:பிளாக் & ஒயிட்” என்ற சுயசரிதைப் புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
அதில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெள்ளை நிற மக்களுக்கானது எனக் குறிப்பிட்ட ராஸ், நான் பழுப்பு நிறமாக இருப்பதால் ஓய்வறையில் பலமுறை விமர்சனத்துக்கு ஆளானேன். இது கொடுமையானது எனக் குறிப்பிட்டுள்ளார். ராஸ் டெய்லரின் இந்தக் கருத்து சர்வதேசக் கிரிக்கெட் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் தற்போது ஐபிஎல்- போட்டிகளில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்தும் மனம் திறந்துள்ளார்.
மெஹாலியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக இடம்பெற்ற ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியில் நான் விளையாடினேன். இதில் பஞ்சாப் அணி 195 ரன்களை இலக்காக நிர்ணயித்து இருந்தது. ஆனால் அந்த இலக்கை எங்களால் அடைய முடியவில்லை. மேலும் நான் ஒரு ரன்னை கூட எடுக்காமல் அந்தப் போட்டியில் எல்பிடபிள்யூ முறையில் டக்அவுட் ஆனேன். இதைத்தொடர்ந்து அன்றிரவு சக வீரர்களுடன் ஹோட்டலின் மேல் தளத்திலுள்ள பாரில் நாங்கள் மது அருந்து சென்றிருந்தோம்.
அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் ஒருவர் “ராஸ்… டக்அவுட் ஆவதற்கு நாங்கள் ஒரு மில்லியன் டாலர்கள் கொடுக்கவில்லை” என்று சொல்லி என்னை 3-4 முறை கன்னத்தில் அறைந்தார். அவர் சிரித்துக் கொண்டிருந்தார். அந்த அடி கடினமானதாக இல்லை. ஆனாலும் அது விளையாட்டாகவும் இல்லை எனத் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தச் சூழலில் நான் அதை சிக்கலாக்க விரும்பவில்லை. ஆனால் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு இது நடப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்றும் ராஸ் பதிவு செய்துள்ளார்.
ஆரம்பத்தில் ஐபிஎல் போட்டிகளுக்காக பெங்களூர் அணியில் இடம்பெற்று விளையாடிவந்த ராஸ் டெய்லரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 2011 ஆம் ஆண்டு 1 மில்லியன் டாலர் விலைகொடுத்து வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓய்விற்குப் பிறகு ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ஒருவர் தன்னைக் கன்னத்தில் அறைந்தார் என்று ராஸ் டெய்லர் குறிப்பிட்டுள்ள கருத்து பல முன்னணி வீரர்கள் மற்றம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com