19 வருடங்கள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
காதல் படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான கதிர், சுமார் 19 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்க்க உள்ளார்.
இதயம், காதல் தேசம், காதலர் தினம், உழவன் மற்றும் காதல் வைரஸ் போன்ற அற்புத காதல் காவிய திரைப்படங்களை, தமிழ் சினிமாவிற்கு தந்தவர் தான் இயக்குனர் கதிர். தமிழில் இளையராஜா இசையமைப்பில், இதயம் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இவர். இவரின் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகம், காதலர்களுக்கு கொண்டாட்டம் தான். காரணம் அந்த அளவிற்கு இவர் படங்களில் காதலுக்கு முதன்மையும், முக்கியத்துவமும் கொடுத்திருப்பார். மேலும் அப்பாஸ், நடிகை ஹீரா, குணால், ரம்பா ரிச்சர்ட் மற்றும் ஸ்ரீதேவி விஜய்குமார் உள்ளிட்ட நடிகர்களை, தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்ததும் இவரே. 2002-இல், இவர் கடைசியாக தமிழில் இயக்கிய 'காதல் வைரஸ்' படம் தோல்வியை தழுவியது.
இந்தநிலையில் தயாரிப்பாளர் ரங்கநாதன் அவர்களின் மகன், கிஷோரை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
"கடந்த 2016-இல் "Nan Love Track" என்ற கன்னட படத்தை இயக்கியிருந்த நான், அதன்பின் சர்வதேச படங்களில் வேலை செய்து வந்தேன். தயாரிப்பாளர் ரங்கநாதன் அவரின் மகன் கிஷோரை, தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகப்படுத்த ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று என்னை அணுகினார். நான் பல புதிய நடிகர்களை சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளதால், இவரையும் நடிக்க வைக்க சம்மதித்தேன். என்னுடைய பிற படங்களை போலவே, இதுவும் காதல் கதையம்சம் கொண்ட திரைப்படம் தான். இசை காதல் கதை கொண்ட இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைக்கிறார். இன்னும் இசையமைப்பு தொடங்காத நிலையில், மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது" என்று கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் ரஹ்மான் மற்றும் இயக்குனர் கதிரின் வெற்றிக்கூட்டணி, கிட்டத்தட்ட 19 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout