கனடாவுக்கு வாருங்கள். டொரண்டோ மேயர் அழைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கனடா தலைநகர் டொரண்டோ சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் டொரண்டோ மேயர் ஜான் டிராய் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டொரண்டோ மேயர், 'ஏ.ஆர்.ரஹ்மான் கனடாவில் குடியேற வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். இதற்கு தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்துள்ளார்.
டொரண்டோ மேயரின் அழைப்புக்கு மிக்க நன்றி. உங்கள் அன்புக்கு நான் நெகிழ்ச்சி அடைந்தேன். ஆனாலும் தமிழ்நாட்டின் நான் என் குடும்பத்தினர்களுடன், நண்பர்களுடனும், தமிழக மக்களுடனும் மகிழ்ச்சியாக உள்ளேன்.
மேலும் நீங்கள் இந்தியா வரும்போது எனது கே.எம். இசைப்பள்ளிக்கு வருகை தரவேண்டும். இந்தியாவும் கனடாவும் இசையில் இணைந்து பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout