ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஒன் ஹார்ட்': சென்சார் & ரன்னிங் டைம் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்து இயக்கியிருக்கும் கான்சர்ட் திரைப்படம் 'ஒன் ஹார்ட். தமிழில் வெளிவரும் முதல் கான்சர்ட் திரைப்படம் இதுதான். இதற்கு முன்னர் ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனை வைத்து உருவாக்கப்பட்ட திஸ் இஸ் இட்` (This is it) என்ற கான்சர்ட் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிபெற்றது. இந்த படத்தை முன்மாதிரியாகக் வைத்து தயாராகியுள்ள திரைப்படம் தான் இந்த ஒன் ஹார்ட்`.
ஒரு இசைக்கலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக மேடையேற்றுகிறார் என்பதுதான் இந்த கான்சர்ட் படத்தின் கான்செப்ட். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தமிழ்ப்பாடல்கள் உள்பட 16 பாடல்கள் அடங்கியுள்ள இந்த படத்தில் ரஹ்மான் உள்பட அவருடைய இசைக்குழுவினர் பலர் நடித்துள்ளார்கள். தமிழ், ஆங்கிலம் , இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் தற்போது சென்சார் செய்யப்பட்டு 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 86 நிமிடங்கள் 45 வினாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது மிக விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
One Heart 😊 pic.twitter.com/rVCkRgcuYU
— A.R.Rahman (@arrahman) August 24, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments