26 வருடங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ரீஎண்ட்ரி

  • IndiaGlitz, [Tuesday,December 04 2018]

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகள் அனைத்திலும் உருவாகும் படங்களுக்கு இசையமைத்துவிட்டார். ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து இரண்டு ஆஸ்கார் வாங்கிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1992ஆம் ஆண்டுக்கு பின் தற்போது மீண்டும் மலையாள படம் ஒன்றுக்கு இசையமைத்து வருகிறார்.

கடந்த 1992ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த 'யோதா' என்ற படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது 'ஆடுஜீவிதம்' என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் இரண்டு பாடல்களும் பின்னணி இசையையும் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

பிரித்விராஜ், அமலாபால் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் பிளஸ்ஸி இயக்கி வருகிறார்.