ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்.

  • IndiaGlitz, [Thursday,May 12 2016]

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் உள்பட உலகின் பல நாடுகளின் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் அணிக்கும் நல்லெண்ண தூதுவர் ஒருவரை அந்தந்த நாடுகளின் பிரபலங்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம்.
இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை இந்திய தடகள சங்கம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோர் இந்த பொறுப்பில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பொறுப்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பினை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் நாமும் இசைப்புயல் ரஹ்மானுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

More News

தேர்தலில் நிற்காமல் ஒரு லட்சம் ஓட்டுக்களை வாங்கிய சிம்பு

இந்நிலையில் சிம்பு தனது பங்காக நேற்று ஒரு பாடலை யுடியூபில் வெளியிட்டார். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிம்பு வெளியிட்ட இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது...

சமந்தாவின் முதல் முயற்சி

'சமந்தா' நடித்த 'தெறி மற்றும் '24' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப்படமாகி உள்ளதால் உற்சாகமாக இருக்கும் அவர் அடுத்த படத்தில் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.....

பாபிசிம்ஹாவின் 'கோ 2' ரன்னிங் டைம்

'ஜிகர்தண்டா' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹாவின் அடுத்த படமான 'கோ 2' நாளை பிரமாண்டமாக தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. தேர்தல் சமயத்தில் வரும் அரசியல் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 'கோ 2' திரைப்படம் மொத்தம் 124 நிமிடங்கள் அĪ

அருண்விஜய்யின் அடுத்த பட டைட்டில் இதுதான்...

தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் நடித்த பின்னர் ஒரு பெரும் திருப்புமுனையை பெற்ற நடிகர் அருண்விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டிலை இன்று காலை 8 மணிக்கு பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் அறிவிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

ஜி.வி.பிரகாஷின் 'பென்சில்'. திரை முன்னோட்டம்

'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன ஜி.வி.பிரகாஷ் கடந்த மாதம் வெளியான 'தெறி' படத்துடன் 50 படங்களுக்கு இசையமைத்து இந்த இளம் வயதிலேயே சாதனை புரிந்துள்ளார்...