ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்.
- IndiaGlitz, [Thursday,May 12 2016]
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 31வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் உள்பட உலகின் பல நாடுகளின் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு நாட்டின் அணிக்கும் நல்லெண்ண தூதுவர் ஒருவரை அந்தந்த நாடுகளின் பிரபலங்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம்.
இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை இந்திய தடகள சங்கம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோர் இந்த பொறுப்பில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பொறுப்பு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பினை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் நாமும் இசைப்புயல் ரஹ்மானுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.