கபிலன் வைரமுத்துவின் ஆவணப்படத்தை வெளியிடும் பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Wednesday,September 20 2017]

கபிலன் வைரமுத்து அவர்களின் 'இளைஞர்கள் என்னும் நாம்' என்னும் ஆவணப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்கள் வெளியிட்ட நிலையில் செப்டம்பர் 25ஆம் தேதி இந்த ஆவணப்படம் வெளியாகவுள்ளது.

இந்த ஆவணப்படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடவுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ரமணா' படத்தில் பல கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்தது ACF என்ற இயக்கத்தை உருவாக்கியது போல், உண்மையாகவே பல கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய 'மக்கள் அணுக்கப் பேரவை' என்ற மாணவர் இயக்கம் குறித்த ஆவணப்படம் தான் இந்த 'இளைஞர்கள் என்னும் நாம்'

அரசியலில் ஊழலற்ற, தன்னலமற்ற ஒரு மாற்று தலைவர் வேண்டும், குறிப்பாக இளளஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த ஆவணப்படம் இன்றைய தமிழகத்திற்கு தேவையான ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்த ஆவணப்படம் இளைஞர்கள் மனதில் எத்தகையை தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு

2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று மதியம் அறிவிக்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் இன்று காலை அறிவித்துள்ளது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

விஜய் வேகத்துக்கு ஈடுகொடுக்க காஜல் செய்த தந்திரம்

தளபதி விஜய் படம் என்றாலே நடிப்பு, ஆக்சன், காமெடி, ரொமான்ஸ், என அனைத்தும் கலந்து ஒரு பொழுதுபோக்கு படத்திற்கு உத்தரவாதமாக இருக்கும்.

ராம்ரஹிம் சிங் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்: திடுக்கிடும் தகவல்

தேரா ஷச்சா ஆசிரமத்தின் சாமியார் ராம் ரஹிம் சிங் 30 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது ஆசிரமத்தை கடந்த சில நாட்களாக போலீஸ் குழு ஒன்று ஆய்வு செய்து வந்தது.

'துப்பறிவாளர்' மிஷ்கினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இன்று வரை கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயத்தை துப்பறிந்து அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்ற சினிமா துப்பறிவாளர்

பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் 'தல'

'தல' என்று அன்புடன் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு பத்மவிருது அளிக்க வேண்டும் என பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.