கமலுக்கு மூளையில் கோளாறு: அமைச்சர் செல்லூர் ராஜூ
- IndiaGlitz, [Saturday,December 01 2018]
சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சிதறடித்த கஜா புயலை விட அதை வைத்து அரசியல்வாதிகள் செய்யும் அரசியல் கொடூரமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.
கஜா புயல் சேதங்களை ஒரே ஒரு நாள் அல்லது ஒருசில மணி நேரங்கள் மட்டும் பார்வையிடும் அரசியல்வாதிகள் அப்பகுதி மக்களுக்கு சேவை செய்வது போல் போஸ் கொடுத்துவிட்டு, அதன்பின் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு மக்கள் படும் துன்பங்கள் குறித்து அறிக்கைகளை வெளியிட்டு அரசியல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒருவரை ஒருவர் குறை கூறும் அறிக்கைகளும் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் நேற்று கஜா புயலை பார்வையிட்ட நடிகர் கமல்ஹாசன், டெல்டா பகுதி மக்களுக்குக் அரசு புளுத்த அரிசியை கொடுத்துள்ளதாகவும், நிவாரண பணிகள் சரிவர நடக்கவில்லை என்றும் குறை கூறியிருந்தார். இதற்கு ஏற்கனவே அமைச்சர் உதயகுமார் பதில் கூறியுள்ள நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் ராஜூ, 'துருப்பிடித்த அரசல்ல; மக்களுக்கு சேவையாற்றும் கூர்மையான அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்றும், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசை குறை கூறும் கமலுக்கு மூளையில் கோளாறு என்றும் கூறியுள்ளார்.
அரசும் எதிர்க்கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்ளாமல் இருதரப்பும் இணைந்து டெல்டா பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.