வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயற்சி: இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்
Send us your feedback to audioarticles@vaarta.com
'குயீன் பட இயக்குனர் விகாஸ் பெஹல் தனக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயற்சித்ததாக பிரபல நடிகை ஒருவர் திடுக்கிடும் புகார் அளித்துள்ளார்.
'குயீன் பட இயக்குனர் விகாஸ் இயக்கிய படம் ஒன்றில் பணிபுரிந்த பிரபல நடிகை ஒருவர், பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது அதே பார்ட்டிக்கு விகாஸும் வந்திருந்தார். குடிபோதையில் தனக்கு முத்தம் கொடுக்க விகாஸ் முயற்சித்ததாகவும் தனது முழு பலத்தையும் கொண்டு அவரை தள்ளிவிட்டு, பார்ட்டியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அந்த நடிகை கூறியுள்ளார்.
குடிபோதையில் இருப்பது போல் நடித்து பெண்களிடம் தவறாக நடப்பது விகாஸின் யுக்தி என்றும், இந்த விஷயம் தெரிந்து அவருடன் பணிபுரிவதை நிறுத்திவிட்டதாகவும் கூறிய அந்த பிரபல இது போன்ற நபர்களை சும்மா விடக்கூடாது என்றாலும் தன்னுடைய எதிர்கால திரையுலக வாழ்க்கையை கருத்தில் கொண்டு தன்னால் தைரியமாக புகார் கொடுக்கவும் தன்னுடைய பெயரை சொல்லவும் முடியவில்லை என்றும் அந்த நடிகை கூறியுள்ளார்.
இயக்குனர் விகாஸ் மீது ஏற்கனவே 'குயீன்' பட நாயகி கங்கனா ரனாவத்தும் பாலியல் புகார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com