A1 டீசரில் சர்ச்சை காட்சிகள்: சந்தானம் மீது போலீஸ் புகார்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சந்தானம் நடித்த 'A1 ' திரைப்படத்தின் டீசர் நேற்று வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த டீசரில் பிராமண சமுதாய பெண்கள் குறித்து சர்ச்சை காட்சிகள் இருப்பதாக குற்றஞ்ச்சாட்டப்பட்டு போலீஸ் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராமரவிக்குமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நடிகர் சந்தானம் நடிப்பில் தயாரிக்கப்பட்ட ஏ1 (அக்யூஸ்ட் நம்பர் ஒன்) திரைப்படத்தின் 2-வது டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் ‘லோக்கல் பையனுக்கும் அக்ரஹாரத்து பெண்ணுக்கும் நடக்கும் கலாசலான லவ் ஸ்டோரி’, ‘ஆப்பாயில் சாப்பிட்டு தன் காதலை தெரிவிக்கும் அக்ரஹாரத்து மாமி’ ‘மயங்கி விழுவது மாமியின் தோப்பனார்,’ காதலுக்காக குடும்பத்தையே உதறிய புரட்சி நாயகன் என்றும், காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வருகிற 27-ந்தேதி திரைப்படம் வெளிவர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இந்து சாதி சிறுபான்மையினராக இருக்கும் பிராமண சமுதாய வாழ்க்கை முறையை கேலி செய்யும் விதத்தில் டீசர் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீராக உள்ள நிலையில் ஒரு வீணான பதட்டத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற கெட்ட உள்நோக்கத்தோடு திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறோம்.
இது போன்று பிற சாதி பெண்களை பிற சாதிகளின் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தி யாரும் படம் எடுக்க முடியாது. அப்படி இருக்கையில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்திய இந்த திரைப்படத்தை தடை செய்து நடிகர் சந்தானம், ஜான்சன், ராஜநாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout