விக்னேஷ் சிவன் - நயன்தாரா மீது போலீசில் புகார்: அதிர்ச்சி காரணம்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாரா ஆகிய இருவர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் சேர்ந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள் என்பதும் இந்த நிறுவனம் பல திரைப்படங்களை தயாரித்து உள்ளது என்பதும் அவற்றில் ஒரு சில திரைப்படங்கள் விருதுகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா தொடங்கிய நிறுவனத்திற்கு ரெளடி பிக்சர்ஸ் என்ற பெயர் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ரெளடி பிக்சர்ஸ் என பெயர் வைப்பதா? என்றும் ரெளடிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இது ரெளடிகளை ஊக்கப்படுத்தும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடி தான்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இருவரும் இணைந்து ஆரம்பித்த நிறுவனத்திற்கு ரெளடி பிக்சர்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிறுவனம் தொடங்கி பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது புகார் அளித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.